மணப்பாறை அருகே கோழிகளை விழுங்க முயன்ற 10 அடி நீள மலைப்பாம்பு வனத்துறையினர் பிடித்து மலைப்பகுதிக்குள் விட்டனர். திருச்சி மாவட்டம் புத்தாநத்தம் பகுதியில் உள்ள தோட்டத்தில் தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த ஆடு, மாடு, மற்றும் கோழிகள் தொடர்ந்து சத்தம் எழுப்பியபடி இருந்தன. இதனையடுத்து தோட்ட பராமரிப்பாளர் அப்பகுதிக்கு சென்று பார்த்தபோது, 10 அடி நீள மலைப்பாம்பு ஒன்று கோழிகளை விழுங்க முயன்றது தெரிய வந்தது.
வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, அங்கு விரைந்த அதிகாரிகள், ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு மலைப்பாம்பை லாவகமாக பிடித்து வனப்பகுதிக்குள் கொண்டு விட்டனர்.