மகளிர் உரிமைத் தொகை திட்ட துவக்க விழா கடலூர் மாவட்டத்துல நடந்திருக்கு. இதுல கலந்துகிட்ட அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், உருட்டுன உருட்டுல கந்தர்வக்கோட்டை சமஸ்தானமே ஆடிப்போச்சுனா பாத்துக்கோங்க. அதாவது, இந்த மகளிர் உதவித் தொகை திட்டத்தின் மூலம் இந்தியாவுல இல்ல, ஏன் வேர்ல்டுலயே இப்படி ஒரு திட்டத்தை யாரும் கொண்டு வந்தது இல்லையாம். அதுமட்டுமில்லாம பெண் முதல்வராக இருந்தப்பவே மகளிருக்காக இந்த மாதிரி திட்டத்தை யோசிக்கல, ஆண் முதல்வராக இருக்கும் ஸ்டாலின் ஆட்சில தான் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டதுனு பெருமை பீத்தியிருக்காரு. 3 கோடிக்கும் மேல பெண்கள் இருக்க மாநிலத்துல 1 கோடி பேருக்கு மட்டும் உரிமைத் தொகை வழங்கிட்டு இந்த பெருமை எல்லாம் நமக்கு தேவையா சார். புரட்சித் தலைவி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில கொண்டு வந்த, தாலிக்குத் தங்கம் திட்டம், மானிய விலையில இருசக்கர வாகனம், அம்மா உணவகம், கறவை மாடுகள்னு அறிவிச்ச திட்டங்கள் எல்லாமே மகளிர் நலன் காக்கும் திட்டங்கள் தான் யாராச்சும் இவருக்கு எடுத்துச் சொல்லுங்கப்பானு நாங்க சொல்லல… ஊருக்குள்ள பேசிக்கிறாங்க…
Discussion about this post