நாகையில நடந்த புத்தகக் கண்காட்சியில ஸ்டால் ஒண்ண திறந்து வைக்குறதுக்குள்ள பெரும்பாடு பட்டிருக்காரு அமைச்சர் ரகுபதி… ஒண்ணுக்கு மூணு பேர் சேர்ந்து போராடி ரிப்பன வெட்டுனது, இந்த விடியா ஆட்சி எவ்வளவு ஷார்ப்பா இருக்குன்னு சந்தி சிரிக்க வச்சிருக்கு…
ஒரு புறாவுக்கு அக்கப்போறான்னு இம்சை அரசன்ல கேட்டமாதிரி, ஒரு ரிப்பன வெட்டுறதுக்கு இவ்வளவு அக்கப்போரான்னு அமைச்சர்கள் செஞ்ச அலப்பறைய பார்த்து கேள்வி எழுப்பியிருக்காக இந்த வீடியோவ பார்த்த இணையவாசிகள்.
நாகப்பட்டினத்துல இந்த வருஷம் இரண்டாவது புத்தகத் திருவிழா 10 நாள் நடந்துச்சு. போன வருஷம் புதுசா புத்தகக் கண்காட்சி தொடங்குன ஷோக்குல விளம்பரம் அது இதுன்னு ஏகத்துக்கும் பில்டப் கொடுத்ததால பொதுமக்களும் ஆவலோடு வந்து பார்த்தாங்க. அதனால ஓரளவு வியாபாரமும் இருந்ததால், கண்காட்சியில ஸ்டால் போட்டவங்களும் சந்தோஷப்பட்டாங்க.
அதே மாதிரி இந்தவருஷமும் புத்தகக்கண்காட்சிய அறிவிச்சதும், ஆர்வமா வந்து ஸ்டால் போட்டவங்க எல்லாம் நொந்து புலம்பியிருக்காங்க. காரணம் அவங்க எதிர்பார்த்த அளவுக்கு கூட்டமும் வரல… புத்தகமும் விக்கல… அதனால அவங்களுக்கு எல்லாம் பெருத்த ஏமாத்தம்தான்.. நாகை மாவட்ட ஆட்சியரோட நேர்முக உதவியாளர், தனி உதவியாளர் மற்றும் அரசுத்துறையினர் உரிய திட்டமிடல் இல்லாம தங்களோட இஷ்டத்துக்கு நிகழ்ச்சிய நடத்துனதான் இதுமுக்கிய காரணமாம். போதுமான விளம்பரங்கள் செய்யாததும் மக்கள் கூட்டம் டல்லாகி, கண்காட்சியே களையிழந்து போயிருச்சு…
இந்த கண்காட்சிக்காக அரசு வழங்கிய நிதி என்ன ஆச்சுன்னு இனுமே தான் தெரியும். இந்த அதிருப்திகளுக்கு மத்தியிலயும் காமெடியான சம்பவம் ஒண்ணு நடந்துருக்கு. அதுவும் அமைச்சர்களையே காமெடியன்களா மாத்தி விட்டிருக்கு கத்தரிக்கோல்… கண்காட்சியோட தொடக்க விழாவுல அமைச்சர் ரகுபதி எண்ணும் எழுத்தும் கூடத்த திறக்க வந்திருந்தாரு. அவர் கூட நாகை மாவட்ட திமுக செயலாளர் கௌதமன், முன்னாள் திமுக அமைச்சர் மதிவாணனும் வந்தாங்க. அரங்கத்த திறக்க கட்டப்பட்டிருந்த ரிப்பன வெட்டுறதுக்குள்ள அந்த மூணு பேரும் சேர்ந்து ஒருவழியாகிப் போனாங்க…
அமைச்சர் மாத்தி மாவட்ட செயலாளர்… மாவட்ட செயலாளர் மாத்தி முன்னாள் அமைச்சர்னு மூணுபேரும், மூணுவிதமான கத்தரிக்கோல வச்சி வெட்டியும் ரிப்பன வெட்டமுடியல… கடைசில ஒருவழியா ரிப்பன இழுத்துப் புடிச்சி வெட்டிட்டாங்க.
ஒரு ரிப்பன வெட்டுறதுக்கே இந்த பாடு படுறாங்களே இவ்வளவுதான் விடியா ஆட்சியோட ஷார்ப்னெஸ்ஸோன்னு அங்க இருந்தவங்க வாய்க்குள்ளேயே சிரிச்சி வைக்க… கலெக்டரோ அதை எல்லாம் பின்னாடி நின்னு பார்த்து ரசிச்சிருக்காரு..
இந்த வருஷம் பெயரளவுல நடந்த புத்தகக்கண்காட்சியில அமைச்சர் நடத்துன காமெடி ரிப்பன் வெட்டும் விழா மட்டும்தான் ஹைலைட்டா இருந்துச்சு…
Discussion about this post