சென்னையில் நுங்கம்பாக்கம் ராயப்பேட்டை தேனாம்பேட்டை அண்ணா நகர் முகப்பேர் உள்ளிட்ட பகுதிகளிலும் திருச்சி கோவை கரூர் நாமக்கல் புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொழில் ரீதியான தொடர்புடையவர்கள் ஆடிட்டர் சண்முகராஜ் அலுவலகத்தில் சோதனை ஆனது நடைபெற்று வருகிறது ஏற்கனவே ஜி ஸ்கொயர் தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது அண்ணா நகரில் வசித்து வரும் ஆடிட்டர் சண்முகராஜ் வீட்டில் சோதனை நடைபெற்றது இந்த நிலையில் தற்போது அவரது அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர் மேலும் ஓய்வு பெற்ற போக்குவரத்து துறை மேலாளர் விக்டர் மற்றும் முகப்பேரில் உள்ள பொதுப்பணித் திலகம் என்கிற பொறியாளர் வீட்டிலும் சோதனையானது நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தொடர்பான மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்காக உள்ள நிலையில் தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்பான பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சோதனையானது நடைபெற்று வருகிறது.
இது மட்டுமல்லாமல் தென் மாவட்டங்களில் உள்ள மணல் குவாரிகளிலும் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை மூன்று முறை சோதனை நடத்திருக்கிறது. இன்றுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு 90 நாட்கள் நிறைவு பெற்றுள்ளன.
தற்போது ஜாமீன் மனு விசாரணைக்கு உள்ள நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி அதில் கிடைக்கும் ஆவணங்களின் அடிப்படையில் மற்ற இடங்களிலும் சோதனை நடத்துவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. சென்னை அண்ணாநகர் ஜி பிளாக் பகுதியில் உள்ள ஆடிட்டர் சண்முகராஜ் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
Discussion about this post