அரியலூர்ல அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்கனும்ன்ற அந்த மாவட்ட மக்களோட கோரிக்கையை ஏத்துக்கிட்டு கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலையில் அரியலூர் அரசு மருத்துவமனை கல்லூரிக்கு அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுனாரு.
அதிமுக ஆட்சில கட்டி முடிக்கப்பட்ட பாலங்கள், கட்டிடங்களுக்கு விடியா திமுக எப்படி ஸ்டிக்கர் ஒட்டி அவங்க பேர வச்சுக்கிட்டாங்களோ அதே மாதிரி, 347 கோடி ரூபாய் மதிப்புல கட்டி முடிக்கப்பட்ட இந்தக் கல்லூரியையும் வாரிசு அமைச்சர் உதயநிதி திறந்து வச்சு, அங்கிருந்த அரங்கத்துக்கு நீட் தேர்வால உயிரிழந்த மாணவி அனிதாவோட பேரையும் சூட்டி பயங்கர எமோஷனலா பேசி டிராமா போட்டு போனாரு.
திறந்து வச்சதோட சரி.. அதுக்கப்பறம் அந்த ஆஸ்பத்திரி ஒழுங்கா இயங்குதானு பாக்கக் கூட வாரிசு அமைச்சருக்கோ, துறை சம்பந்தப்பட்ட அமைச்சருக்கோ நேரமில்ல போல. திறந்து வச்சு 5 மாசமாகியும் இதுவரை டாக்டரோ, நர்ஸோ வேலைக்கு வைக்கல, மருத்துவ உபகரணங்கள் கூட இல்லாம ஆஸ்பத்திரி காத்தாடிட்டு இருக்கு.
இந்நிலையில அரியலூருக்கு ஒரு பங்கஷனுக்கு வந்த உதயநிதிட்ட மருத்துவமனையோட லட்சணத்தை பத்தி கேட்டப்போ, மனுஷன் என்ன நடக்குதுனே தெரியாம முழிச்சாக்காரு…
உடனே பக்கத்துல இருந்த அரசு அதிகாரிங்க சொல்றத கேட்டு விரைவில் நடவடிக்கை எடுப்போம்னு சொல்லிட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆயிட்டாரு. விடியா திமுகவுக்கு, அதிமுக செஞ்ச திட்டங்களுக்கு பேர் வைக்கத் தான தெரியும், மக்கள் நலத்திட்டங்கள செயல்படுத்துறது எப்படி தெரியும்னு நாங்க சொல்லல… ஊருக்குள்ள பேசிக்கிறாங்க…
Discussion about this post