கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தை சர்வதேச நிறுவனங்களுக்கு தாரை வார்க்க திமுக அரசு துடிப்பதாக வியாபாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். விடியா அரசின் நடவடிக்கையைக் கண்டித்து கையெழுத்து இயக்கம் துவக்கியுள்ளனர் வியாபாரிகள். இதுகுறித்து இந்த செய்தித் தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்…
விடியா அரசின் கார்ப்பரேட் ஆதரவு போக்கை கண்டித்து கையெழுத்து இயக்கத்தை துவக்கியுள்ளனர் வியாபாரிகள்…
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டை சென்னையை அடுத்த திருமழிசைக்கு மாற்றுவதற்கு தேவையான பணிகளை திமுக அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையினர் கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளனர்.
பல லட்சம் வணிகர்களுக்கு வாழ்வாதாரம் அளித்து வரும் கோயம்பேடு மார்க்கெட்டை இடம் மாற்றி விட்டு, இந்த இடத்தை பெருநிறுவனங்களுக்கு தாரை வார்க்க முடிவு செய்துள்ளது விடியா அரசு. கோயம்பேடு மார்க்கெட்டை இடம் மாற்றுவதற்கு, போக்குவரத்து நெரிசல் ஒரு காரணமாக கூறப்படுகிறது. ஆனால், போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய வேண்டியது அரசின் கடமை. அதை செய்யாமல் மக்கள் மீதும், வியாபாரத்துக்கு கூடும் வணிகர்கள் மீதும் பழி சுமத்துகிறது விடியா அரசு.
அதிமுக ஆட்சியில் சிறு வணிகர்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் என கருதி வால்மார்ட் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தடை விதித்தவர் அன்றைய முதல்வர் ஜெயலலிதா. ஆனால், விடியா அரசோ எதிர்வரும் தேர்தல் செலவுகளுக்காகவே கோயம்பேடு வணிக வளாகத்தை இடித்து தரைமட்டம் ஆக்கிவிட்டு, லூலு, வால்மார்ட் போன்ற சர்வதேச நிறுவனங்களுக்கு சந்தை அமைத்து கொடுக்க உள்ளதாக வியாபாரிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
சென்னை மட்டுமின்றி சென்னை புறநகர் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாகவும், சிறு வியாபாரிகள் வணிகம் செய்வதற்காகவும் தொடங்கப்பட்ட கோயம்பேடு மார்க்கெட்டை பெரு நிறுவனங்களுக்கு தாரை வார்த்தால் சென்னை மட்டுமல்ல, கோயம்பேட்டை சார்ந்திருக்கும் லட்சக்கணக்கான சிறு, குறு வணிகர்களின் வாழ்வாதாரத்தை அது பாதிக்கும் என்பதை உணர்ந்து விடியா அரசு செயல்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
Discussion about this post