விடியா திமுக ஆட்சிக்கு வந்த நாள்ல இருந்தே மக்கள் உணர்வுகள வச்சு டிராமா போடுறதே வேலையா போச்சு. ஆட்சிக்கு வந்ததும் ஆடு, தாடி கதை எல்லாம் பேசி, நாங்க ஆளுநர மதிக்க மாட்டோம், அவர் கூட அன்னம் தண்ணி பொழங்க மாட்டோம்னு எல்லாம் வசனம் பேசிட்டு, சுதந்திர தின டீ பார்ட்டி, குடியரசு தின டீ பார்ட்டினு எல்லாத்துக்கும் போய் போஸ் எல்லாம் குடுத்துட்டு வந்தாரு ஸ்டாலின்.
இப்போ நீட் தேர்வு தோல்வியால மாணவன் ஜெகதீஸ்வரனும், அவங்க அப்பா செல்வசேகரும் அடுத்தடுத்த நாள்ல தற்கொலை பண்ணி உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழக மக்களையும் சோகத்துல ஆழ்த்தியிருக்கு. தேர்தல்ல நீட்ட ஒழிக்கிறதா வெற்று வாக்குறுதி அளிச்ச திமுக மேல மக்களோட கோபம் திரும்பியிருக்கு… அத மடை மாத்துறதுக்காக, நாங்க நீட் ஒழிப்பு தீர்மானம் நிறைவேற்றிட்டோம்… ஆளுநர்தான் ஒண்ணுமே செய்யல… அதனால கவர்னர் கொடுக்குற டீ பார்ட்டிக்கு நாங்க போகமாட்டோம்னு சீன் போட்டுருக்காரு.
எங்களால சொன்ன மாதிரி நீட்ட ஒழிக்க முடியல.. அதனால இந்த உயிரிழப்புகளுக்கு பொறுப்பேத்து ஆட்சிய ராஜினாமா செய்யுறோம்னு சொல்றத விட்டுட்டு, டீ குடிக்கப் போகமாட்டோம்… வடை திங்கப் போகமாட்டோம்னு சொல்றதெல்லாம், இழவு வீட்டுலயும் அரசியல் பண்றவங்கதானே திமுகவுகாரங்கன்னு நாங்க சொல்லல… ஊருக்குள்ள பேசிக்கிறாங்க.
Discussion about this post