சென்னை மாநகராட்சி மேயராக வலம் வருபவர் பிரியா. எங்கு சென்றாலும் அமைச்சர்கள் பாதுகாப்பிலேயே ஆய்வு, பேட்டி என சுற்றி வந்தார். இதைப் பலர் கேள்வி எழுப்பியபோது, பிரியா அரசியலுக்கு புதியவர் என்பதால் அமைச்சர்கள் வழிகாட்டி வருகின்றனர் என இணைய உபி-க்கள் முட்டுக் கொடுத்தனர். ஆனால், மேயராக பதவியேற்று ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்னுமா மேயர் பதவி குறித்து பிரியா தெரிந்துகொள்ளவில்லை? என மக்கள் கேள்வி எழுப்பியதும் அப்ஸ்காண்ட் ஆகினர் உபி-க்கள்.
சேகர் பாபு, கே.என்.நேரு என அமைச்சர்களின் பொம்மை போல் செயல்பட்டு வருகிறார் மேயர் பிரியா என்ற குற்றச்சாட்டும் முன் வைக்கப்படுகிறது. மேயர் பதிலளிக்க வேண்டிய பிரஸ்மீட்டுகள் பலவற்றில் கூட சேகர் பாபுவும், கே.என்.நேருவும் பதிலளித்ததை பலர் கண்டுள்ளனர்.
இதுமட்டுமல்லாமல் அமைச்சர்கள் சிலர் மாநகராட்சி நிர்வாகத்தில் நேரடியாகவே அதிகாரம் செலுத்தி வருவதாக அதிகாரிகள் சிலர் புலம்புகின்றனர். அவ்வாறு தலையிடும் அமைச்சர்கள், அதிகாரிகளை ஒருமையிலும் பேசி வருகின்றனர். இதுகுறித்து தெரிந்தும் ஸ்டாலின் மெளனம் காத்து வருகிறாராம்.
சென்னையில் வளர்ச்சிப் பணிகளைக் கண்காணிப்பது முதல், எந்தெந்த ஒப்பந்ததாரருக்கு பணிகள் ஒதுக்குவது என்பது வரை தொடர்ந்து அமைச்சர்களின் தலையீடு உள்ளதாம். இதனால் மேயர் என்ற தனித்துவத்தை இழந்து பொம்மை போல வலம் வருகிறார் பிரியா.
இதுகுறித்து அரசல் புரசலாக பலர் பேசி வருவதைக் கண்டும் காணாமல் எத்தனை காலம் வாய்மூடி இருக்கப் போகிறார் ஸ்டாலின்? ஸ்டாலின் இதில் நேரடியாகத் தலையிட்டு மாநகராட்சி விவகாரங்களில் இஷ்டத்துக்கு ஆடும் அமைச்சர்களின் போக்குக்கு கடிவாளம் போட்டு, மேயரை அவரது அதிகாரத்துக்கு உட்பட்டு செயல்பட அனுமதிக்க முன்வருவாரா?
Discussion about this post