சென்னை மாநகராட்சியில் மொத்தம் 200 வார்டுகளில் 101 பெண் கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் பெரும்பாலான பெண் கவுன்சிலர்கள் செயல்படுவதே இல்லை என்கிற குற்றச்சாட்டு ஏற்கனவே எழுந்துள்ளது. அந்த பெண் கவுன்சிலர்களின் கணவர், தந்தை, சகோதரர், மகன் என யராவது ஒருவர் நிழல் கவுன்சிலர்களாக இருந்து வருகின்றனர். இப்படி பெண் கவுன்சிலர்களை பணிவிட செய்யவிடாமல் அக்குடும்ப ஆண்களே பணி செய்து வருவது என்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக நீதி, பெண்கள் நலன் தான் எங்களுக்கு முக்கியம் என்று கூறிவரும் திமுக சென்னை மாநகராட்சி வரலாற்றில் முதல் முறையாக ஒரு பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் கவுன்சிலர் பிரியாவை மேயராக அறிவித்தது. இந்த விளம்பர அரசின் விளம்பர நடவடிக்கைதான் இது என்று போகப் போக அனைவருக்கும் தெரிந்துவிட்டது, அவ்வளவு பொய், அத்தனை புரட்டு. மேயர் பிரியா கலந்துகொள்ளும் நிகழ்வில் அவர் பேச வேண்டியதை எதாவது ஒரு அமைச்சர் பேசிவிடுவார். அப்படியில்லை என்றால், பின்னால் நின்று அமைச்சர் சொல்ல சொல்ல, அந்த அம்மாவும் சொல்லிக்கொடுப்பதை அப்படியே ஒப்பிப்பார்.
மேயர் பிரியா அரசியலுக்கு புதியவர், அதனால் தான் சில அமைச்சர்கள் வழிகாட்டியாக செயல்பட்டார்கள் என்று திமுகவினர் அன்றைக்கு முட்டுக்கொடுத்தனர். அப்படி அரசியல் அனுபவம் இல்லாதவருக்கு ஏனைய்யா இந்த மேயர் பதவியைத் தூக்கிக் கொடுத்தீர்கள் என்று கேட்டால் திமுக வட்டாரம் கப்சிப் தான். தற்போது எந்த மாதிரியான குற்றச்சாட்டு எழுந்துள்ளது என்றால், சென்னை மாநகராட்சி நிர்வாகத்தில் திமுக அமைச்சர்களே நேரடியாக தலையிடுவதாக அதிகாரிகள் புகார் தெரிவித்துள்ளார்கள்.
சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் முக்கியத் திட்டங்கள் மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும். ஆனால் இப்போது நிலைமை தலைகீழாகத் திரும்பியுள்ளது. தற்போது கொண்டுவரப்பட்ட நகராட்சிக்கான விதியில் சென்னை மாநகராட்சி மேயருக்கே தனித்துவ அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நகராட்சி நிர்வாகத்தின் கீழ் சென்னை மாநகராட்சியும் வந்துவிட்டது. இருந்தாலும், தொடர்ந்து மாநகராட்சியின் வளர்ச்சிப் பணிகள் மேயரின் நேரடி கட்டுப்பாட்டில் தான் நடக்க வேண்டும். ஆனால், இங்கு சென்னையில் என்ன வளர்ச்சிப் பணிகள் நடைபெறுகின்றன என்பதை கண்காணிப்பதிலிருந்து, யார் யாருக்கு ஒப்பந்தங்களை ஒதுக்க வேண்டும் என்பது வரை மூத்த அமைச்சர்கள் தான் முடிவெடுக்கிறார்களாம். இதனால் மேயர் பிரியாவுக்கான தனித்துவம் குறைக்கப்பட்டுள்ளது. சமூக நீதி பேசும் திமுகவினர், மேயர் பிரியா பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் செயல்பட விடாமல் தடுக்கிறார்களா? என்பது திமுகவில் உள்முகத்திற்கே தெரிந்த இரகசியம். அதேபோல மாநகராட்சி அதிகாரிகளை அமைச்சர்கள் ஒருமையில் பேசியும் திட்டியும் வருகிறார்கள் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் இதுபோலான உள்ளடி விவகாரங்களை முதல்வர் நேரடியாக நின்று கவனிக்காமல், அவர் போக்கிலேயே இருக்கிறார். பிரபலங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்வதிலும், அரசு விழாவை குடும்ப விழாவாக மாற்றுவதிலும் கண்ணில் எண்ணெய் ஊற்றி கவனித்து வரும் விடியா முதல்வருக்கு, சமூக நீதியின் அடிநாதம் எப்படி புரியும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
Discussion about this post