ஆமை வேகத்தில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். தோண்டப்பட்டுள்ள குழிகளில் சிறுவர், முதியவர்கள் தவறி விழுந்து விபத்து ஏற்படுவதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர். மந்தநிலையில் நடைபெறும் பணிகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.
சென்னை மாநகராட்சி பகுதிகளில் பல மாதங்களாக ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளின் நிலை இதுதான்… விடியா ஆட்சியில் எந்தப் பணிகளும் வேகமாக முடிவதில்லை என நொந்து கொள்கின்றனர் பொதுமக்கள்…
சென்னை மாநகரத்தில் மழை நீர் வடிகால் பணிகள் பல்வேறு இடங்களில் மந்தநிலையில் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக கோபாலபுரம், ராயப்பேட்டை, மந்தைவெளி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பணிகளை முடிக்காமல் இழுத்தடித்து வருகின்றனர்.
கோபாலபுரம் அருகே பள்ளிகள் இருக்கக்கூடிய இடத்தில், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தோண்டப்பட்ட கால்வாய் பள்ளங்கள் மூடப்படாமல் உள்ளன. இதனால் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் தினமும் உயிரைப் பணயம் வைத்து செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பியபோது மழைக்காலம் துவங்கியுள்ளதால் பணிகளை முடிப்பதில் சிரமம் ஏற்படுவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மழைக்காலம் வருவதற்கு முன்கூட்டியே பணிகளைத் தொடங்கியிருக்கலாமே என கேள்வி எழுப்பினால் மழுங்க மழுங்க விழிக்கின்றனர் அதிகாரிகள். மூடப்படாத குழிகளில் மழைநீர் தேங்கி, கொசு உற்பத்தி அதிகரித்து, அதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் மக்கள் புலம்புகின்றனர்.
பொதுமக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருவதால், பல இடங்களில் அவசர கதியில் பணிகள் நடைபெறுகிறது. உறுதியான முறையில் பணிகளை மேற்கொள்ளாமல் ஏனோ தானோ என பணிகளை முடித்து வருகின்றனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழை வருவதற்கு முன்பாகவே தயார் நிலையில் அனைத்து கால்வாய்களும் சரி செய்யப்பட்டு பணிகள் முடுக்கி விடப்பட்டன. ஆனால், விடியா ஆட்சியில் எப்பொழுதுமே ஒரு விஷயம் நடந்த
முடிந்த பிறகுதான், அதை பற்றியே யோசிக்க தொடங்குவார்கள் என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
Discussion about this post