கடலூர் சேத்தியாத்தோப்பு அருகே என்.எல்.சி நிறுவனத்தின் சுரங்க விரிவாக்கத்திற்காக, நெல் வயல்களை அழித்து, சுரங்கத்திலிருந்து வெளியேறும் நீர், பரவனாற்றில் கலக்கும் வகையில் இணைப்பு கால்வாய் வெட்டும் பணி இரண்டாவது நாளாகவும் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் இருக்கிறது. இதற்காக சேத்தியாதோப்பு, வளையமாதேவி, கற்றாழை, மும்முடி சோழகன் உள்ளிட்ட கிராமங்களின் விவசாய நிலங்கள், என்.எல்.சி நிறுவன விரிவாக்கத்திற்காக கையப்படுத்தப்பட்டன.
கடந்த 2006 மற்றும் 2011 திமுக ஆட்சியில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு, ஏக்கர் ஒன்றுக்கு 3 முதல் 6 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு கொடுக்கப்பட்டது. என்.எல்.சி நிறுவனம் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் விரிவாக்கப்பணிகளை துவங்காததால் விவசாயிகள் நெற்பயிர் சாகுபடி செய்து வந்தனர். இதற்கு இடையில்தான் மத்திய அரசானது புதிய குடியமர்வு திட்டத்தில் ஏக்கருக்கு, 25 லட்சம் ரூபாய இழப்பீடு வழங்க வேண்டும் என்று 2021ல் உறுதியளித்தது. அதையடுத்து என்.எல்.சி-க்கு நிலம் கொடுத்த விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் தங்களுக்கும் 25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். வீட்டிற்கு ஒருவருக்கு வேலை வாய்ப்பினையும் ஏற்படுத்தி தருமாறும், வாழ்வாதாரத்திற்கு 10 லட்சம் ரூபாய், 10 செண்ட் வீட்டு மனையுடன் கூடிய வீடுகள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து பல போராட்டங்களையும் விவசாயிகள் நடத்தி வந்தனர்.
கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் விவசாயிகள் சாகுபடி செய்து இருந்தனர். அதில் நெற்கதிர்கள் நன்றாக செழித்து வளர்ந்திருந்தது. இந்த நிலங்களில் என்.எல்.சி நேற்று முந்தினம் கால்வாய் வெட்டும் பணிகளைத் தொடங்கியது. இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 25க்கும் மேற்பட்ட மண்வெட்டும், ‘பொக்லைன்’ இயந்திரங்களுடன் களமிறங்கியது. அப்போது 500க்கும் மேறப்ட்ட போலிசர் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் போராட்ட்ங்கள் வலுத்தன. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் என்.எல்.சி நிர்வாகத்தையும், அதற்கு துணை நிற்கும் விடியா திமுக அரசையும் கண்டிக்கும் வகையில் நேற்றைக்கு அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தார். மேலும் அதிமுக சார்பாக புவனகிரி எம்.எல்.ஏ அருண்மொழித்தேவன் தொடர்ந்து என்.எல்.சி விவகாரத்தில் விவசாயிகளுக்காக நின்று போராடி வருகிறார். அதனைத் தொடர்ந்து தற்போது அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் மாநிலங்களவையில் என்.எல்.சி விவகாரம் குறித்து விவாதம் செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
Discussion about this post