விழுப்புரத்தில் நடைபெற்ற மகளிர் உரிமை தொகை விண்ணப்ப சரிபார்ப்பு முகாமில் பங்கேற்ற பொதுமக்களிடம் அமைச்சர் பொன்முடி, உனக்கு தகுதி இருக்கிறதா?, நீ எந்த கட்சி? என ஒருமையில் கேள்வி கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மகளிர் உரிமை தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் சரிபார்க்கும் மற்றும் பதிவேற்ற முகாமில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துக்கொண்டார். அப்போது முகாமிற்கு வந்த பொது மக்களிடம் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு உனக்கு தகுதி இருக்கிறதா? என அமைச்சர் பொன்முடி ஒருமையில் கேள்வி எழு ப்பினார்.அங்கிருந்த மூதாட்டி ஒருவரிடம் நீ எந்த கட்சி என பொன்முடி கேட்டபோது நான் எப்போதும் அதிமுகதான் என கூறினார். இதனால் முகம் சுருங்கிய அமைச்சர் பொன்முடி அதிகாரிகளை முறைத்துவிட்டு அங்கிருந்து சென்றார்.
Discussion about this post