அமலாக்கத்துறையின் கஷ்டடயில் இருந்து மருத்துவ சிகிச்சை மேற்கொண்டிருந்த செந்தில்பாலாஜி இன்றூ காவேரி மருத்துவமனையில் இருந்து காணொளி காட்சி மூலம் நீதிபதிகளின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி விசாரிக்கத் தொடங்கினார். எப்படி இருக்கிறீர்கள் என்று நீதிபதி கேட்ட கேள்விக்கு, வலியுடன் இருப்பதாக செந்தில்பாலாஜி பதில் அளித்துள்ளார். 14 நாட்கள் நீதிமன்றக் காவலானது இன்று முடிவடைய உள்ள நிலையில் இன்று மீண்டும் ஆஜர் படுத்தினார்கள். அதனைத் தொடர்ந்து ஜூலை 12 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலானது செந்தில் பாலாஜிக்கு நீடிப்பு செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
முன்னதாக ஐசியுவில் இருந்த செந்தில்பாலாஜியை கணொளி மூலம் இணைப்பதற்கு மிகவும் தாமதமானது என்று சொல்லப்படுகிறது. அதற்கு ஐசியுவிலிருந்து ஜெனரல் வாடிற்கு மாற்றப்பட்டிருப்பதால் உடனடியாக தொழில்நுட்பங்களை பயன்படுத்த முடியவில்லை என்று மருத்துவமனைத் தரப்பு பதில் கூறியது.
Discussion about this post