திருநெல்வேலியில் பதற்றத்தை ஏற்படுத்திய திமுக எம்.பி ஞானதிரவியம் மீது வழக்கு பாய்ந்துள்ள நிலையில், சொந்தக் கட்சிக்காரர்களால் ஸ்டாலின் தூக்கம் தொலைப்பது குறித்தும்,அமைச்சர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் ஆட்சி மற்றும் கட்சியில் ஸ்டாலின் அதிகாரத்தை இழந்துவிட்டாரா என்பது குறித்தும் அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.
என் சோகக் கதையக் கேளு தாய்க்குலமே… என்று உள்ளுக்குள் புலம்பிக் கொண்டிருக்கிறாராம் ஸ்டாலின்… இந்தப் புலம்பலுக்கு காரணமும் அவர்தான். ஏனெனில் தகுதி திறமையை மறந்து பெட்டிகளை மட்டுமே வாங்கிக் கொண்டு தேர்தலில் சீட்டுகொடுத்ததும், வெற்றி பெற்று வந்தவர்களிடம் பெட்டியை வாங்கிக்கொண்டு அமைச்சராக்கி, அவர்களிடம் இருந்து கலெக் ஷனை மட்டுமே குறிக்கோளாக வைத்திருந்ததும் தான் என்கிறார்கள் அரசியல் விவரம் அறிந்தவர்கள்.
அதன் எதிரொலியாகவே, மக்கள் பிரச்சனைகளை கவனிப்பதா அல்லது சொந்தக் கட்சிக்காரர்களின் களேபரங்களை தடுப்பதா என்று தூக்கத்தை தொலைத்துக் கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இப்போது தன் பங்குக்கு முதல்வரின் தூக்கத்தை கெடுத்திருக்கிறார் நெல்லை திமுக எம்.பி. ஞான திரவியம்.
திருநெல்வேலி சிஎஸ்ஐ திருமண்டல நிர்வாகத்தின் பேராயராக இருப்பவர் பர்னபாஸ். இதன் செயலாளராக இருப்பவர் இருப்பவர் ஜெயசிங். நெல்லை திருமண்டல உயர் கல்வி நிலை குழு செயலாளராவும், திருச்சபையின் கீழ் இயங்குற பாளையங்கோட்டை ஜான்ஸ் பள்ளியின் தாளாளராவும் திமுக எம்.பி. ஞானதிரவியம் இருந்துள்ளார்.
இந்த நிலையில் ஞான திரவியம், ஜெயசிங் உள்ளிட்டவர்கள், பேராயர் பர்னபாஸிடம் நிர்வாக ரீதியில் முரண்பாடு காட்டியதால், ஞான திரவியத்தின் பதவிகளை, பேராயர் பறித்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், பேராயர் தரப்பைச் சேர்ந்த மதகுருவை, ஞானதிரவியம் தரப்பினர் தாக்கியுள்ளனர். கிறிஸ்தவ சிறுபான்மை மக்களிடையே திமுக எம்பியின் இந்த செயல் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் தாக்குதலுக்கு உள்ளனவரின் புகாரின் பேரில் திமுக எம்.பி.ஞானதிரவியம் உள்ளிட்ட 33 பேர்மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது…நிலைமை இப்படி இருக்க அவரிடம் 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என திமுக தலைமை கேட்டு இருக்கிறது…
திமுக எம்.பி. ஒருவரின் இந்த செயலால் மட்டும் ஸ்டாலின் நொந்து நூடுல்ஸாகி விடவில்லை… ஏற்கனவே அமைச்சர் செந்தில்பாலாஜி கைது, அமைச்சர்கள் சிவசங்கர், பொன்முடி ஆகியோர் மீதான ஊழல் புகார்கள், கூட்டணிக் கட்சியினரிடையே திமுகவினர் மேற்கொள்ளும் முட்டல் மோதல்கள் என்று எல்லாம் ஒன்று சேர்ந்து அவரை நிலைகுலையச் செய்துள்ளன.
தனது சொந்த கட்சியில் நடக்கும் களேபரங்களை தடுக்கமுடியாமல் ஸ்டாலின் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், ஆட்சியிலும், கட்சியிலும் ஸ்டாலினுக்கான அதிகாரம் கேள்விக்குறிதான் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
Discussion about this post