தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோர் பணியில் இருந்து ஓய்வு பெறும் நிலையில், சீர்கெட்டிருக்கும் தமிழக சட்ட ஒழுங்கை பாதுகாக்கப் போகும் புதிய டிஜிபி மற்றும் தலைமைச் செயலாளர் யார் என்பது குறித்து அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.
2021ம் ஆண்டுக்குப்பிறகு, தமிழகமே அலங்கோலமாக மாறியிருக்கும் சூழலில், தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு ஆகியோரின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது.
சட்ட ஒழுங்கிற்கும் அதிகாரிகளின் இதற்கு பணி மூப்புக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கலாம்.. நியாயம் தான்… தலைமைச்செயலாளராக வெ.இறையன்பை நியமிக்கும்போது, ஆஹா ஓஹோ என்று சமூகவலைதளங்களில் ஃபயர் விட்டனர் திமுகவின் உடன்பிறப்புகள்… நேர்மையான அரசை உறுதிசெய்யவே நேர்மையானவரை ஸ்டாலின் நியமித்திருக்கிறார் என்றெல்லாம் அளந்துவிட்டனர். ஆனால் ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளில் மக்கள் எதிர்ப்பை சம்பாதித்த ஒரே ஆட்சி என்றுதான் பெயரெடுத்தது… புத்தக வெளியீட்டு விழாக்களில் அவர் காட்டும் அக்கறையை மக்கள் நலனில் காட்டியிருக்கலாமே என்றெல்லாம் பேசித்தீர்த்தனர் பலரும்.. நேர்மையான அதிகாரியான வெ.இறையன்புவவை பணி செய்ய விடவே இல்லை இந்த விடியா ஆட்சியின் கிட்சன் கேபினர் என்று இன்னொரு விமர்சனமும் எழுந்தது அனைவரும் அறிந்ததே.
இது ஒரு புறம் என்றால், சட்ட ஒழுங்கை காக்க வேண்டிய இன்னொரு முக்கியப் பொறுப்பு உள்ள டிஜிபி பதவிக்கு சைலேந்திரபாவுவை நியமித்தவுடனேயே, தமிழ் சினிமாக்களில் வரும் ஹீரோ சீன்களைப்போன்று இனி அதிரடியாக இருக்கப்போகிறது என்று எண்ணிக்கொண்டிருந்த மக்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.. புஸ் என்று போனது அனைவரின் எதிர்பார்ப்புகளும்.. திருட்டை தடுப்பார், கொலை கொள்ளையை கண்டுபிடிப்பார் நடவடிக்கை எடுப்பார் என்றெல்லாம் எண்ணிக்கொண்டிருந்தபோது, வாழைப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி அவர் வெளியிட்ட வீடியோவைப் பார்த்து, மயங்கித்தான் போனார்கள் பலரும்.. முதல்வருக்கு போட்டியாக சைக்கிளிங் வீடியோபோடுவது, பத்திரமாக இருங்கள் என்று விழிப்புணர்வு வீடியோ போடுவது என்று சோசியல் மீடியா இன்புளுயன்சர் போல செயல்பட்டார் சைலேந்திரபாபு.
கஞ்சா வேட்டை, 2.0 , 3.0 என்று ஓ போட்டுக்கொண்டிருந்தவரை வைத்து முதல்வர் என்னதான் செய்திருப்பார்? என்று கேள்வியும் எழாமல் இல்லை… விளைவு, தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு பல் இளிக்கிறது….
கனியாமூர் பள்ளி கலவரம், கோவையில் தீவிரவாதிகளின் சதியால் நிகழ்ந்த சிலிண்டர் குண்டு வெடிப்பு, வேங்கை வயல் மலம் கலந்த விவகாரம், அதிகரித்து வரும் லாக்- அப் மரணங்கள், பல்பீர் சிங் பல் பிடுங்கிய விவகாரம் என எந்த விவகாரத்திலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வை தேடித் தராமல் இருந்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின்…. அதற்கு நடவடிக்கை எடுக்கத் தவறியதில் இந்த அதிகாரிகளுக்கும் பங்கு உண்டல்லவா?
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த பதவிகளுக்கு அடுத்து வரப்போகும் அதிகாரிகளை எப்படி தேர்ந்தெடுக்கப் போகிறார் முதல்வர் ஸ்டாலின்? அமைச்சர்களை, அதிகாரிகளை தேர்ந்தெடுப்பதில் ஃபெயிலியர் ஆன ஸ்டாலின் இனிமேலாவது விழிப்புடன் அதிகாரிகளை தேர்ந்தெடுப்பாரா? திமுக கிட்சன் கேபினட்-டின் அழுத்தம் அதிகம் இருக்கும் இந்த பதவிகளுக்கு வரும் அதிகாரிகள் எப்படி அதை எதிர்கொள்ளப்போகிறார்கள்?முதல்வர் ஸ்டாலினைவிட அதிக பொறுப்பு மிக்க இந்த பதவிகளுக்கு அடுத்து வரப்போவது யார் ? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
Discussion about this post