தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு தர வரிசைப் பட்டியலானது நாளை வெளியிடப்பட உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்குகின்ற 450க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகளில் 1.54 லட்சம் இளநிலை பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன.
அதனையொட்டி, இந்த அனைத்து இடங்களிலும் 2023-24 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு மே மாதம் 5 முதல் ஜூன் மாதம் 4 ஆம் தேதிவ்ரை நடைபெற்று வந்தது. மொத்தம் 2 லட்சத்து 29 ஆயிரத்து 167 விண்ணப்பங்கள் பதிவாகின. ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 124 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்திருந்தனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணியானது ஜூன் 20 ஆம் தேதி நிறைவடைந்தது. இந்நிலையில், பொறியியல் கலந்தாய்வு தரவரிசைப் பட்டியல் நாளை, அதாவது ஜீன் 26 ஆம் தேதி வெளியாக உள்ளது. மாணவர்கள் தரவரிசைப் பட்டியலை www.tneaonline.com என்ற இணைய தளத்தில் அறியலாம் என்றூ சொல்லப்பட்டுள்ளது. தரவரிசை சார்ந்து புகார்கள் ஏதேனும் தெரிவிக்க எண்ணினால் ஜூன் 30 தேதி வரை மாணவர்களுக்கு அவகாசம் வழங்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஜூலை 2ம் தேதி அடுத்தக்கட்ட கலந்தாய்வு தொடங்குகிறது.
Discussion about this post