முறையான ரீதியில் சொத்துகுவிப்பு செய்திருக்கும் அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்து நீதிமன்றக் காவலில் வைத்துள்ளனர். தற்போது அவருக்கு உடல் நிலை மோசமாக உள்ளக் காரணத்தால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுக்கொண்டே நீதிமன்றக் காவலில் உள்ளார். இதனைத் தொடர்ந்து அவரது துறைகளான மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையானது அமைச்சர் முத்துசாமிக்கும், மின்சாரத்துறை நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவிற்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என்று திமுக தரப்பு கூறியது. அதற்கான பரிந்துரையை ஆளுநருக்கு திமுக சார்பாக அனுப்பியிருந்த நிலையில் இலாகா இல்லாத அமைச்சராகக் கூட செந்தில்பாலாஜி தொடரக்கூடாது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். குற்றவியல் வழக்கு பதிவான நபர் ஒருவர் சட்டபடி அமைச்சராகத் தொடரக்கூடாது என்று இந்த நடவடிக்கையை ஆளுநர் எடுத்துள்ளார். இதனால் திமுகவினர் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
Discussion about this post