அமலாக்கத்துறை ரெய்டில் செந்தில்பாலாஜி வசமாக சிக்கியிருக்கும் நிலையில், திமுக அரசு கவிழப்போகிறதா என்பது குறித்தும் அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்…
2001 – ஜூன் மாதம் … அய்யோ அய்யோ கொல பண்றாங்களே…கொல பண்றாங்களே…. என தன்னை கைது செய்ய வந்த காவல்துறையினரைப் பார்த்து கதறினார் கருணாநிதி.
2023 – ஜூன் … அமலாக்கத்துறையினர் கைது செய்த நிலையில், ஐயோ நெஞ்சு வலிக்குதே என்று ஆஸ்கர் அவார்டுக்கு பரிந்துரை செய்யும் அளவுக்கு அழுகுனி நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி…..
ஊழல் குற்றச்சாட்டு, சொத்து குவிப்பு, டாஸ்மாக் மூலம் கல்லா கட்டியது, சொகுசு பங்களா கட்டி வருவது, உயர் ரக வெளிநாட்டு கார்களை வாங்கி வைத்திருப்பது என மல்ட்டி மில்லியனர் ரேஞ்சுக்கு உயர்ந்திருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியை வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த மாதம் ரவுண்டு கட்டினர்….
அவர்களிடம் இருந்து கிடைத்த ஆவணங்களின் அடிப்படையிலும், போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக செய்த மோசடி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் அனுமதியுடனும் தமிழகத்தில் சென்னை, கரூர் உள்ளிட்ட இடங்களில் செந்தில்பாலாஜிக்கு சொந்தமான வீடுகளில் ரெய்டு நடத்திய அமலாக்கத்துறையினர், ஊழல் செய்தது தொடர்பாக ஜூன் 13ஆம் தேதி நள்ளிரவு கைது செய்தனர்….
அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு வாகனத்தில் அழைத்துச் செல்ல முயன்றபோது, வாகனத்தில் ஏற்றிய அதிகாரிகளை தன் கால்களால் எட்டி உதைத்தும், தனது ஆடைகளை சரி செய்து கொண்டும் இருந்த செந்தில் பாலாஜியின் காணொலியும் சமூகவலைதளங்களில் வைரலாகி இருக்கிறது…..
ஆனால் திடீரென்று தனக்கு நெஞ்சு வலிப்பதாகக் கூறி அவர் அரங்கேற்றிய நாடகத்தால், அவரை ஓமந்தூரார் மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க… திமுக கம்பெனி அதனை வைத்து நடத்திவரும் காட்சிகள் சினிமாவை மிஞ்சும் வகையில் இருப்பதைப் பார்த்து ஒட்டுமொத்த இந்தியாவுமே சிரித்துக் கொண்டிருக்கிறது.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நள்ளிரவு நேரம் தொடங்கி, திமுக அமைச்சர்கள் முதல் அமைச்சர், வாரிசு அமைச்சர், முதல்வரின் மருமகன் என்று ஓமாந்தூரார் மருத்துவமனையே மினி அறிவாலயமாகி உள்ளது.
முதலமைச்சர் முதல் திமுக அமைச்சர்கள் அனைவருமே செந்தில் பாலாஜியை பார்த்த நிலையில், கணவரை காணவில்லை என்பது போல ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருக்கிறார் அவரது மனைவி மேகலா….
விடியா திமுக அரசின் அங்கமாக உள்ள ஒரு அமைச்சருக்காக முதலமைச்சர் முதல் அமைச்சர் பெருமக்கள் வரை மருத்துவமனைக்கு வருவதும், அவரைக் காக்கத்துடிப்பதும் உண்மையிலேயே அவர் மீதான பாசம் இல்லை… எங்கே செந்தில்பாலாஜி வாயைத் திறந்தால் தானும் தனது குடும்பத்தாரும் சிக்கிக் கொள்வோம் என்னும் ஸ்டாலினின் பதைபதைப்புதான் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். செந்தில்பாலாஜியால் திமுகவின் ஆட்சியும் கவிழும் என்பதும் அந்த பதைபதைப்புக்குள் அடங்கியிருக்கிறது.
– ஆசாத் மற்றும் வினோத் பச்சையப்பன்
Discussion about this post