கோடை விடுமுறை முடிந்து இன்று முதல் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் தொடங்கின. உயர் வகுப்புகளுக்கு தேர்ச்சி பெற்றுள்ள ஒவ்வொரு மாணவர்களும் மகிழ்ச்சியுடன் பள்ளிகளுக்கு வருகின்றனர்.
2022 – 2023 கல்வி ஆண்டில் பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதியுடன் நிறைவடைந்து கோடை விடுமுறையானது மே மாதம் முழுவதும் விடப்பட்டது. அதன் பின்னர் முதல் கட்டமாக ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடுமையான வெப்பம் காரணமாக பள்ளிகள் திறக்கும் தேதி ஜூன் ஏழாம் தேதியாக நீட்டிக்கப்பட்டது.
அதன் பின்னரும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸ்க்கு மேல் வெப்பநிலை தொடர்ந்து பதிவாகி வந்ததன் காரணமாக மாணவர்களின் நலன் கருதி மீண்டும் பள்ளிக்கல்வித்துறை கோடை விடுமுறையை நீட்டித்து பள்ளிகள் திறக்கும் தேதியை ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புகளுக்கு ஜூன் 14ஆம் தேதியும் 6 முதல் 12 ஆம் வகுப்பிற்கு ஜூன் 12ஆம் தேதியும் திறக்கப்படும் என அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை.
அதன்படி கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் செயல்பட தொடங்குகிறது.
Discussion about this post