மின்வெட்டு என்பது திமுகவின் பரிசாக தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து கிடைத்து வருகிறது. இன்று காலை முதல் தற்போது வரை சென்னையில் மூன்று இடங்களில் தொடர் மின்வெட்டானது ஏற்பட்டு உள்ளது. திமுக தன் தேர்தல் வாக்குறுதியில் மின்வெட்டு வழங்கப்படும் என்று சொல்லியிருக்கிறதா என்று தெரியவில்லை. கொடுத்த வாக்குறுதிகளைத் தவிர, மின்வெட்டு போன்ற பரிசுகள்தான் கிடைக்கிறது என்று மக்கள் புலம்பி வருகின்றனர். சென்னை நெசப்பாக்கம், சூளைமேடு, தட்டான்குளம் ஆகிய பகுதிகளில் நான்கு மணி நேரத்திற்கும் மேலான மின்வெட்டால் மக்கள் மிகவும் அவதிப்பட்டுள்ளனர். இதனால் மின்சார வாரியத்தையும், தமிழகத்தை ஆளும் விடியா திமுக அரசையும் எதிர்த்து கோஷங்கள் எழுப்பினர்.
மின்வெட்டிற்கு இந்த ஆட்சியில் ஏதேனும் தீர்வு கிடைக்குமா? என்று மக்கள் தங்களின் கோரிக்கையையும், வலியுறுத்தல்களையும் அறிவுறுத்தி வருகிறார்கள். கண்டுகொள்ளுமா இந்த அரசு? கண்டுகொள்ளுவாரா செந்தில்பாலாஜி? கடந்த அதிமுக ஆட்சியில் மின்மிகை மாநிலமாக இருந்த தமிழ்நாடு, திமுக ஆட்சியில் மின் குறை மாநிலமாக ஆகியிருப்பது இந்த அரசின் மிகப்பெரிய அலட்சிப் போக்கு என்று அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
சென்னை நெசப்பாக்கம். இரவு 4 மணி நேர மின் தடை. pic.twitter.com/wVWPnoPO0H
— Savukku Shankar (@Veera284) June 4, 2023
Discussion about this post