கடந்த 10 ஆண்டுகாலமாக கள்ளச்சாரய விற்பனை தமிழ்நாட்டில் ஒழிக்கப்பட்டிருந்தது. ஆனால் விடியா திமுக ஆட்சியில் மறுபடியும் கள்ளச்சாரய விற்பனை தலைதூக்கியுள்ளது…. உயிர்கள் பலியாகியிருக்கின்றது என்ற குற்றவுணர்ச்சியே இல்லாமல் அமைச்சர் பொன்முடி பொறுப்பற்ற பதில் கூறியிருக்கிறார்…. அது பற்றி விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.
திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்ற நாளில் இருந்தே தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டம் தலைவிரித்தாடுகின்றது….. கஞ்சா, போதை சாக்லேட் போன்றவைகளை கட்டுப்படுத்த ஆப்ரேசன் கஞ்சா வேட்டை என பல வெர்சன்களை காவல்துறை மேற்கொள்கிறது… ஆனாலும் இன்னும் போதைப்பொருள் கட்டுப்பாட்டிற்கு வந்தபாடில்லை….. தற்போது அந்த வரிசையில் கள்ளச்சாரயமும் இணைந்துள்ளது என்பதுதான் சோகத்தின் உச்சம் என கூறலாம்….
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே, எக்கியார்குப்பம் கடற்கரை ஓரம் உள்ள வம்பாமேட்டைச் சேர்ந்த 16 பேர் கள்ளச்சாரயம் குடித்து, ரத்த வாந்தியுடன் உயிருக்கு போராடிய நிலையில், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்…. இதில் சுரேஷ், சங்கர், தரணிவேல் உட்பட 5 பேர் கள்ளச்சாராயம் அருந்தியதால் மரணம் அடைந்தனர்.
இது தொடர்பாக காவல் துறையினர் நடத்திய விசாரணையில், மரக்காணம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த 25 வயதான அமரன் என்பவர் புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட சாராயத்தை விற்றதும், இதனை வாங்கி எக்கியார் குப்பம் மீனவர் பகுதியைச் சேர்ந்த பலர் குடித்ததும் தெரியவந்தது. தொடர்ந்து மரக்காணம் போலீசார் அமரனை கைது செய்தனர்.
இந்த நிலையில்தான் அமைச்சர் பொன்முடி, காவல்துறையின் மெத்தனப்போக்கால் 5 உயிர்கள் பலியாகியுள்ள குற்றவுணர்ச்சியே இல்லாமல், பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார்.
உயிரிழந்தவர்கள் குடித்தது கள்ளச்சாரயமா இல்லையா என்பதை அறிந்து கொள்ளாமல், நான்கு போலீசாரை சஸ்பெண்ட் செய்திருப்பதாக கூறுகிறார் அமைச்சர். மேலும் திமுக ஆட்சி காலத்தில்தான் போதைப்பொருளை தடுக்க தனி அமலாக்கத்துறை உருவாக்கியதாகவும் கூறினார்…. தனியார் செய்தி தொலைக்காட்சியின் பத்திரிகையாளர் ஒருவர், இது தொடர்பாக கேள்வி எழுப்பிய போது கோபமடைந்த பொன்முடி ஒருமையில் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.
போதைப்பொருளை கண்காணிப்பதாக திமுக தரப்பில் கூறுகின்றனர். ஆனால் இந்த இரண்டு ஆண்டுகளில் வரலாறு காணாத வகையில் கள்ளச்சாரய விற்பனை அதிகரித்துள்ளது, அரசே போலி மதுபானங்களை தலைமையேற்று நடத்துகின்றது, மேலும், 24 மணி நேரமும் மதுவகைகள் கிடைக்கும்படி செய்துள்ளது விடியா ஆட்சி…. இந்த இரண்டு ஆண்டுகளில் ஏதாவது நடவடிக்கை எடுத்திருந்தால் இத்தனை உயிர்பலிகள் நடந்திருக்காது…. போலீசார் கள்ளச்சார வியாபாரிகளுடன் இணைந்து கண்துடைப்பு நாடகம் ஆடுகின்றனரா, இல்லை உளவுத்துறை தகுந்த தகவல்களை திரட்டவில்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்….
செய்தியாளர் சேர மனோகரனுடன் மற்றும் பாலா துரைசாமி
Discussion about this post