திமுக மீது ஊழல் புகார் பூதாகரமாக எழுந்து, அமைச்சர்களின் செயல்பாடும் திமுகவை அழிக்கத் தொடங்கியிருப்பதாக கூறப்படும் நிலையில், இதன் எதிரொலியாக அமைச்சர்கள் பிடிஆர், நாசர், கயல்விழி ஆகியோர் பதவியை இழக்க உள்ளது குறித்து அலசி ஆராய்கிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.
ஓரே டேப்…அம்போன்னு வாழ்க்கை என்பது போல பிடிஆர் பேசிய ஆடியோ பதிவு 2ஆண்டுகளை நிறை செய்யும் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும் வகையில் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. வாரிசு அமைச்சரும், மருமகன் சபரீசனும் 30,ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்து சேர்த்துள்ளதாக ஆடியோவில் பி.டி.ஆர். புட்டு புட்டு வைத்தது தான் இன்று அகில இந்திய அரசியலிலும் பேசு பொருளாகி இருக்கிறது.
ஸ்டாலினின் வாரிசுகள் மட்டும்தான் இப்படியா? அல்லது அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் எனத் தொடங்கு திமுக நிர்வாகிகளும் தங்கள் பங்குக்கு ஊழலில் திளைத்திருக்கிறார்களா என்னும் கேள்வியும் மக்கள் மன்றத்தில் எழுந்துள்ளது.
திமுக குடும்பத்தோட தொடர்புடையதாக கூறப்படும் ஜிஸ்கொயர் நிறுவனத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் வருமான வரி சோதனைகளால் திமுகவின் அதிகார மையங்கள் தொடங்கி அவர்களோடு நெருக்கம் காட்டும் அத்தனைபேரும் அரண்டு கிடக்கிறார்கள்… எல்லாம் ஊழலின் பின் விளைவுகள்தான்!
இத்தனைக்கும் காரணம் பி.டி.ஆரின் ஆடியோ என்பதால் அவர் மீது திமுக தலைமை கடும் ஆத்திரத்தில் உள்ளதாகவும், அதனால் அவருடைய இலாகாவை பறித்து டம்மியாக்கவும் திட்டமிட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அதே போல ஆட்சிக்கு தலைவலியான இரண்டு விஷயங்களாக ஆவின் விவகாரமும், வேங்கை வயல் சம்பவமும் பார்க்கப்படுகிறதாம். சொந்தக்கட்சிக்காரணை கல்லை எடுத்து எறிவது, பொதுமக்களிடம் நெறி தவறி பேசுவது என்று விளையாட்டுத் தனம் செய்து வில்லங்கம் கூட்டும் ஆவடி நாசரால், ஆவின் நிர்வாகமே சீர்குலைந்து போயிருப்பதோடு மக்கள் மத்தியிலும் ஆவின் விவகாரத்தால் திமுக மிதிபட்டு கொண்டிருக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில், பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் இருக்கும் மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரம் தமிழ்நாட்டையே அதிர வைத்தது. அதில் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. அதே போல தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே சிவாடி ஊராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டியில் இளைஞர்கள் சிலர் சிறுநீர் கழித்த பஞ்சாயத்தும் எழுந்துள்ளது. இந்த விவகாரமும் திமுகவுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
எனவே ஆவின் விவகாரத்தில் இருந்து தப்பிக்கவும், பட்டியலின மக்களின் எதிர்ப்பை சமாளிக்கவும் இரண்டு துறை அமைச்சர்களான ஆவடி நாசர், கயல்விழி ஆகியோரை பதவியில் இருந்து பறித்து தங்கள் தவறுகளை மறைக்க திமுக திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
ஊழலில் மூழ்கித் திளைக்கும் திமுக அமைச்சர்களை முதல்வர் ஸ்டாலின் மாற்ற இருப்பதன் காரணம் என்ன? பிடிஆரின் ஆடியோவால் திமுகவின் அஸ்திவாரம் ஆடிப்போய் இருக்கும் நிலையில், பிடிஆர், நாசர், கயல்விழி செல்வராஜ் ஆகியோரின் இலாக்காகளை ஸ்டாலின் மாற்றினால் மட்டும் என்ன நடந்து
விடப்போகிறது என்கின்றனர் பொதுமக்கள்.
Discussion about this post