எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் அதிமுகவின் பொதுச்செயலாளராக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்றைக்கு காலை உயர்நீதிமன்றத்தில் வெளியான பொதுக்குழுத் தீர்மானமும் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலும் செல்லும் என்கிற தீர்ப்பின் அடிப்படையில் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் பொதுச்செயலாளராக பதிவியேற்றுள்ளார். அதற்காக அதிமுகவின் கொறாடாவும் முன்னாள் அமைச்சருமான எஸ்பி வேலுமணி அவர்கள் தன்னுடைய டிவிட்டர் தளத்தில் தன்னுடைய மகிழ்ச்சியைப் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.
அஇஅதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை அங்கீகரித்தும், அவற்றை எதிர்த்த வழக்குகளை வழக்குகளை தள்ளுபடி செய்தும் சென்னை உயர்நீதிமன்றம், தீர்ப்பு வழங்கி இருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.
தொண்டர்களின் தொண்டரான மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன் திரு. எடப்பாடியார் அவர்கள் கழகத்தின் பொதுச் செயலாளராக முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, எனக்கும் கழகத்தின் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் அளவில்லா மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தந்துள்ளது. பெரும்பான்மை மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்ற மாண்புமிகு அண்ணன் திரு. எடப்பாடியார் அவர்கள் மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்பது உறுதி என்று முன்னாள் அமைச்சர் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.
#அஇஅதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை அங்கீகரித்தும், அவற்றை எதிர்த்த வழக்குகளை வழக்குகளை தள்ளுபடி செய்தும் சென்னை உயர்நீதிமன்றம், தீர்ப்பு வழங்கி இருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. (1/3)
— SP Velumani (@SPVelumanicbe) March 28, 2023
Discussion about this post