தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து 240 விசைப்படகுகள்
கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் நிலையில் 3 ஆயிரம் பேர் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், விசைப்படகு உரிமையாளர்கள்மீன பிடி தொழிலார்களிடமிருந்து ஆறு சதவீதம் மட்டுமே வட்டி பணம் பிடிக்க வேண்டும், 6 நாட்கள் கடலுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து விசைப்படகு மீன்பிடி தொழிலாளர் சங்கத்தினர் ஐந்தாவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் 10 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து அரசு, இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post