விக்கிரவாண்டி பேரூராட்சிக்குட்பட்ட இரண்டாவது வார்டு எம்.ஜி.ஆர் நகரில் வசிக்கும் நரிக்குறவ சமுதாய மக்கள் இலவச பட்டா, குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் உள்ளிட்டவற்றை தரக்கோரி விழுப்புரம் ஆட்சியரகத்தில் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், அவர்களுக்கு பட்டா வழங்கப்படாமல் இழுத்தடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நரிக்குறவயின மக்கள் ஆட்சியரகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதோடு, அரசு வழங்கிய ஆதார், ரேஷன் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை சாலையில் வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர். விடியா திமுக அரசு பொறுப்பேற்றத்திலிருந்து 20க்கும் மேற்பட்ட முறை மனு அளித்ததாகவும், ஆனால் தங்களை வைத்து போட்டோ சூட் எடுத்துக்கொள்ளும் அரசு தங்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
Discussion about this post