தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிகள் முடிவடைந்ததும் இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த 5ஆம் தேதி வெளியிடப்பட்டதாக கூறினார். மொத்தம் 12 லட்சத்து 32 ஆயிரம் பேருக்கு புதிதாக வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், இந்தப் பணிகளை 2 மாதங்களுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார். தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்ந்தவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படும் நிலையில், இடைத்தேர்தல் நடக்க இருக்கும் ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள புதிய வாக்காளர்களுக்கு முன்னுரிமை தரவேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.போலி வாக்காளர் அட்டைகளை உருவாக்க முடியாதபடி கூடுதலாக 3 பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், , இதுவரை அட்டைக்கு வெளியே ஒட்டப்பட்ட ஹோலோகிராம் இனி அட்டைக்குள்ளேயே பொருத்தப்படும் என்றும், ‘கோஸ்ட் இமேஜ்’ என்ற புதிய அம்சம் சேர்க்கப்படும் என்றும் கூறினார். மேலும் கியூ.ஆர். கோடுடன் மிகச்சிறிய அளவிலான எழுத்து அச்சிடப்படும் என்றும் சத்ய பிரதா சாகு தெரிவித்தார்.
Discussion about this post