அனுப்பர்பாளையம் திலகர் நகரில் கடந்த 14ஆம் தேதி பனியன் கம்பெனியில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் பெட்டி கடையில் சிகரெட் புகைத்துள்ளனர். அப்போது தமிழக இளைஞர்கள் மீது சிகரெட் புகையை ஊதியதாக கூறப்படுகிறது. இதனை தட்டிகேட்ட தமிழக இளைஞர்களிடம், வட மாநில இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் தமிழக இளைஞர்களை 100க்கும் மேற்பட்டோர் துரத்தி சென்று தாக்கியுள்ளனர். இது குறித்த காட்சிகள் சமூக வலைத்தலங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்திற்கு வட மாநிலத்தவர்கள் குறைந்த ஊதியத்தில் வேலை பார்ப்பதால் தமிழர்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில், இதுபோன்ற செயல் கண்டிக்கத்தக்கது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், தமிழகத்திற்கு வேலை தேடி வரும் வடமாநில இளைஞர்களின் தரவுகள் முறையாக சேகரிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டனர்.
Discussion about this post