சங்கரன்கோவில் அருகே உள்ள பெருங்கோட்டூர் கிராமத்தில் இரு வேறு சமுதாயத்தை சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் தண்ணீர் திறந்து விடும் நபர், மாற்று சமுதாயத்தை சேர்ந்தவர்களை அவதூறாக பேசியதாகவும், இதனை அறிந்த ஊர் பெரியவர்கள் பிரச்சனையை பேசி தீர்த்து வைத்தாகவும் கூறப்படுகிறது. இதனையெடுத்து, அப்பகுதிக்கு சென்ற சங்கரன்கோவில் காவல் துணை கண்காணிப்பாளர் சுதீர், இரு தரப்பு சமுதாயத்தை சேர்ந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதோடு மிகவும் அநாகரிகமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. பிரச்சனை சரிசெய்யப்பட்டது என்று கூறியும் காவல்துறையினர் இப்படி நடந்து கொள்வது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று கூறிய கிராம மக்கள், காவல் துணை கண்காணிப்பாளர் சுதீர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
Discussion about this post