இருளர் மக்களின் வாழ்வியலையும், அவர்கள் அனுபவித்து வரும் துன்ப துயரங்களையும் இதனைவிடத் துல்லியமாக வெளிப்படுத்தமுடியாது என்று ஜெய்பீம் படம் பார்த்து கலங்கிய ஸ்டாலினுக்கு, நிஜத்தில் ஒரு இருளர் குடியிருப்புக்கு இன்னும் விடியல் கிடைக்கவில்லை என்பது தெரியுமா என்பது தெரியவில்லை அதுவும் அவரது கட்சியை சேர்ந்த உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் திறந்து வைத்த இருளர் குடியிருப்பு
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள கணபதிபுரம் பகுதியில் அதிமுக ஆட்சியில் பசுமை வீடு திட்டம் 2020-2021 கீழ் 66 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இருளர் பழங்குடியின மக்களுக்காக 22
தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் முழுமையாக பணிகள் நிறைவடையும் முன்பே, கடந்த ஆண்டு ஜூலை மாதம் 21-ஆம் தேதி அந்த குடியிருப்பை திறந்து வைத்து ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டது விடியா திமுக.
குடியிருப்பில் உள்ள வீடுகளில் மின் இணைப்பு வழங்காமல், வெறும் காலி பெட்டிகளை மட்டுமே வைத்துள்ளனர். மின்சாரம் இல்லாததால் ஒவ்வொரு இரவும் அவர்களுக்கு விடியா இரவாகவே ஆகியுள்ளது. தொகுப்பு வீடுகளைச் சுற்றி காலி நிலங்களாக இருப்பதால் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகம் இருப்பதால் இரவுகளில் வீடுகளில் தூங்கவே அச்சம் தெரிவிக்கின்றனர்.
Discussion about this post