ஆறாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நெடுஞ்சாலைத் திட்டங்களை செயல்படுத்துவதில், தமிழ்நாடு அரசு மெத்தனம் காட்டுவதாக மத்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது.
தமிழ்நாட்டில் 6 ஆயிரத்து 137 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 9 நெடுஞ்சாலை திட்டங்களை செயல்படுத்த தயாராக இருப்பதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் கூறியுள்ளது.
ஆனால், இதனை தமிழ்நாடு அரசு நீண்ட காலமாக தாமதப்படுத்தி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று கட்டுப்பாடு, கூடுதல் கடன் வாங்க அனுமதியில்லை, நிலங்களை கையகப்படுத்துவதில் தாமதம், வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி கிடைப்பதில்லை போன்ற குற்றச்சாட்டுகளை தமிழ்நாடு அரசு மீது மத்திய அரசு சுமத்தியுள்ளது.
இதுதொடர்பாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டுள்ள பட்டியலில், 384 கிலோ மீட்டர் தொலைவிற்கான சாலைப் பணிகள் தாமதமாகி வருகிறது என்றும் இதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் 2016 முதல் 2018ம் ஆண்டுகளில் பெறப்பட்டு நெடுஞ்சாலை பணிகள் தொடங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post