கிராமப்புறங்களில் பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கு முதுகலைப் படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க தடையில்லை என்ற தனி நீதிபதியின் உத்தரவை, இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு உறுதி செய்துள்ளது.
தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து தீர்ப்பு
முதுகலைப் படிப்பில் 50% இட ஒதுக்கீடு வழங்க தடையில்லை
கிராமப்புறத்தில் பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கு மேற்படிப்பில் 50% இடஒதுக்கீடு, 30% ஊக்க மதிப்பெண் வழங்க தமிழக அரசு உத்தரவு
இட ஒதுக்கீடு அல்லது ஊக்க மதிப்பெண் ஆகிய இரண்டில் ஏதாவது ஒரு சலுகையை மட்டும் வழங்க வேண்டுமென வழக்கு
கிராமப்புற மருத்துவமனைகளில் பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கு 2 சலுகைகளும் வழங்க எந்த தடையும் இல்லை: தனிநீதிபதி
மனுவை தள்ளுபடி செய்த தனி நீதிபதி பொதுப் பிரிவில் அவர்கள் பங்கேற்க தடை இல்லை என உத்தரவு
மேல்முறையீட்டு வழக்கு, நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய் மற்றும் சக்திகுமார் அடங்கிய அமர்வில் விசாரணை
தனி நீதிபதியின் உத்தரவை உறுதிசெய்து நீதிபதிகள் தீர்ப்பு; நடப்பு கல்வியாண்டில் இட ஒதுக்கீடு நடைமுறையை பின்பற்ற உத்தரவு
Discussion about this post