நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் முடிவுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் ஜனவரி 8ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று அண்ணா திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கடந்த 2017ம் ஆண்டு நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு முழு விதிவிலக்கு வழங்க கோரும் இரண்டு சட்ட மசோதாக்கள் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் சட்டப்பேரவையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
அவை இரண்டும் குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் திமுகவும், நீட் தேர்வு விலக்கிற்கு புதிய சட்ட மசோதாவை நிறைவேற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதில் எதற்குமே இன்னும் ஒப்புதல் கிடைக்காத நிலையில், கோரிக்கைக்கு வலு சேர்க்கும் விதமாக வரும் ஜனவரி 8 ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
Discussion about this post