குஜராத்தில் 5 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
பாவ்நகர் மாவட்டத்தில், பாஞ்ச் பிப்லா கிராமத்தை சேர்ந்தவர் கீதா பாலியா. இந்தப் பெண்ணுக்கு 5 குழந்தைகள் இருந்தன. அவர் வறுமையின் பிடியில் சிக்கித் தவித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் இவர் அங்குள்ள ஒரு கிணற்றில் தன் 5 குழந்தைகளையும் வீசி விட்டு தானும் குதித்தார். இதைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த சிலர், அவர்களைக் காப்பாற்ற கிணற்றில் குதித்தனர்.
ஆனால் அதற்குள் 3 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உயிரிழந்தனர். கீதா பாலியாவையும், 10 வயதான மூத்த மகள் தர்மிஸ்தாவையும் மட்டுமே அவர்களால் உயிருடன் மீட்க முடிந்தது. இறந்த குழந்தைகள் 1½ வயது முதல் 8 வயது வரையிலானவர்கள்.
2 ஆண்டுகளாக வறுமையின் பிடியில் சிக்கி, சாப்பாட்டுக்கும் வழியில்லாமல் தவித்த நிலையில், கெட்ட ஆவியின் தூண்டுதலால்தான் பிள்ளைகளை கிணற்றில் வீசிவிட்டு, தானும் குதித்தேன் என்று கீதா பாலியா போலீசாரிடம் தெரிவித்தார். அவரை கைது செய்த போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்ததனர்.
Discussion about this post