கன்னியாகுமரி மாவட்டத்தில், கால்வாய் உடைந்து குடியிருப்புகளுக்குள் புகுந்த வெள்ள நீரை, 22 நாட்கள் ஆகியும் அதிகாரிகள் அப்புறப்படுத்தாததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள நீர் நிலைகள் நிரம்பியதோடு, ஆங்காங்கே தேங்கிய வெள்ளம் வடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆசாரிப்பள்ளத்தில் உள்ள அனந்தன் கால்வாவாயில் உடைப்பு ஏற்பட்டு, வெள்ள நீர் குடியிருப்புகளுக்குள் புகுந்தது. இடுப்பளவு தேங்கிய மழை நீரால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளான நிலையில், 22 நாட்கள் ஆகியும் இதுகுறித்து அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
சுமார் 65 க்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீரில் மிதக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனால், அத்தியாவசிய தேவைக்குக் கூட வெளியே வர முடியாமல் வீடுக்குள்ளேயே முடங்கியுள்ளதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
Discussion about this post