தமிழகத்தில், எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து உயர்மட்ட அதிகாரிகள் அளவிலான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது.
தமிழகத்தில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள், கடந்த 1ம் தேதி முதல் திறக்கப்பட்டது. பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவது பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை அதிகரித்துள்ளது. மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து உயர்மட்ட அதிகாரிகள் அளவிலான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெற்ற வந்த நிலையில் நேரடி வகுப்புகள் நடத்துவது தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கிறது. மேலும், பள்ளிக்கல்வித்துறை சார்பாக நேரடி வகுப்புகள் நடத்துவதாக தொடர்பாக ஏற்கனவே தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் பெற்றோர் விரும்பினால் மட்டுமே மாணவர்களை பள்ளிகளுக்கு அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உயர்மட்ட அதிகாரிகள் அளவிலான இந்த ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Discussion about this post