ஆக்கப்பூர்வமாக செயல்படாத அமைச்சர்களை மாற்றம் செய்வது குறித்து இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி, பொறுப்பேற்று நாளையுடன் 50 நாட்கள் நிறைவடையவுள்ள நிலையில், துறை வாரியாக அமைச்சர்கள் மேற்கொண்ட பணிகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டறிகிறார். ஏற்கனவே திமுகவில் மூத்த நிர்வாகிகளாக இருப்பவர்களுக்கு, அவர்கள் கேட்ட துறைகள் வழங்காமல், விருப்பமில்லாத துறைகளை வழங்கியிருப்பதாக பொதுவெளியில் பேசப்பட்டு வந்தது. இதை தொடர்ந்து, முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே இலாகாக்களை மாற்றி தர வேண்டும் என்று திமுக மூத்த நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கியிருந்தனர்.
இந்த நிலையில் கொரோனா காலத்தில் அமைச்சர்கள் துறை சார்ந்து மேற்கொண்டிருக்கக்கூடிய பணிகள் குறித்து, இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் ஸ்டாலின் கேட்டறிய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சரவை மாற்றத்திற்கு திமுக நிர்வாகிகள் உடன்படாத நிலையில், துறை சார்ந்து அவர்கள் மேற்கொள்ளும் பணிகளை காரணம் காட்டி அமைச்சரவையை மாற்றம் செய்ய ஸ்டாலின் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Discussion about this post