சென்னை பள்ளிக்கரணை – வேளச்சேரியை இணைக்கும் ரேடியல் சாலையில் புதருக்கு இடையே சந்தேகத்திற்கிடமாக நின்ற சொகுசு காரை, பள்ளிக்கரணை ஆய்வாளர் பிரவின் ராஜேஷ், சோதனையிடச் சென்றார். அப்போது, இளைஞர் ஒருவர் இளம்பெண்ணுடன் உல்லாசத்தில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இளம்பெண் அரைகுறை ஆடையுடன் காரில் இருந்து இறங்கி இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றார்.
அந்த இளைஞர், தென்சென்னை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு நெருக்கமானவர் என்று கூறி, எம்.பி.பாஸ் ஒன்றை காண்பித்து அங்கிருந்து தப்பிச் சென்றார். காவல் ஆய்வாளருக்கு சந்தேகம் ஏற்பட்டதால், திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியனை தொடர்பு கொண்டு விசாரித்தார். அப்போது, தனக்கு அந்த இளைஞர் யார் என்றே தெரியாது என திமுக எம்.பி. கூறியுள்ளார். பின்னர், இளைஞரின் வீட்டிற்கு சென்று அவரை கைது செய்த காவல்துறையினர், போலி பாஸ் மற்றும் சொகுசு காரை பறிமுதல் செய்தனர்.
அவர், மடிப்பாக்கத்தை சேர்ந்த பல் மருத்துவர் ஷியாம் கண்ணா என்பது தெரியவந்தது. போலி பாசை, ராஜகோபாலன் என்ற மருத்துவரிடம் இருந்து வாங்கியதாக அவர் கூறியுள்ளார். அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், போலி பாஸ் விவகாரத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என விசாரித்து வருகிறார்.
Discussion about this post