அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக இரண்டாயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியிலுள்ள இருப்பாளியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மினி கிளினிக்கை ரிப்பன் வெட்டி, குத்து விளக்கேற்றி தொடங்கிவைத்தார். அப்போது பேசிய அவர், தமிழகம் முழுவதும் அரிசி அட்டை வைத்துள்ள 2 கோடியே 6 லட்சம் பேருக்கு இரண்டாயிரத்து 500 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்றும், நியாய விலைக்கடைகளின் மூலம் ஜனவரி 4ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். கொரோனா வைரஸாலும், புயலாலும் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் சிறப்பாக பொங்கல் கொண்டாட இந்த பரிசு உதவும் என்றும் முதலமைச்சர் கூறினார்.
தை பொங்கலை கொண்டாடும் வகையில், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, உலர் திராட்சை, முந்திரி, ஏலக்காய் ஆகியவை துணிப்பையில் வைத்து வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார். அதிகாரிகள் வீடு வீடாக வந்து டோக்கன் வழங்குவார்கள் என்றும், டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாளில் சென்று பொங்கல் பரிசை பெற்றுக்கொள்ளலாம் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
பொங்கல் சிறப்பு தொகுப்பு என்னென்ன? – முதலமைச்சர் அறிவிப்பு
Discussion about this post