குடிமராமத்து பணிகளால் ஏரிகள், குளங்களில் சேகரிக்கப்படும் நீரின் அளவு அதிகரித்து இருப்பதாக, உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குளங்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஒரு லட்சம் பனை விதைகள் நடும் வேலை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
பனை விதைகளை செங்கல் சூளைகளில் எரிப்பதை தடுத்து நிறுத்தப்படும் வகையில், முதலமைச்சரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.
தமிழகம் முழுவதும் குடிமராமத்து பணிகளால் ஏரிகள், குளங்கள் நிரம்பி உள்ளதாகவும், இதனால் விவசாயத்திற்கு போதுமான தண்ணீர் இருப்பதாகவும் அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.
Discussion about this post