விழுப்புரம் மாவட்டத்தில் கொரானா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, மருத்துவர்கள், வருவாய்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தமிழக அரசு விதித்துள்ள விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறாதா என்பது குறித்தும், மாவட்ட எல்லைகளில் காவல்துறையினர் முழு சோதனை நடத்த வேண்டும் எனவும், மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தினார். தொடர்ந்து வீடு வீடாக சென்று கொரோனா கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுவதற்கு பாராட்டு தெரிவித்தார்.
Discussion about this post