டாஸ்மாக் கடைகளில், மது வாங்க ஆதார் எண்ணை கட்டாயமாக்கிய உத்தரவை, மறுபரிசீலனை செய்யக் கோரி, டாஸ்மாக் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டாஸ்மாக் மதுபான கடைகளில் மது வாங்க வருபவர்களின் பெயர், முகவரி மற்றும் ஆதார் ஆகிய தகவலை பெற்றுக் கொண்டு, ரசீது தர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்திருந்தது. இந்த நிலையில், ஆதார் எண்ணை கட்டாயமாக்கிய உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி, டாஸ்மாக் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவில், பலரிடம் ஆதார் அடையாள அட்டை இல்லை என்பதால், அதற்கு விலக்கு அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த மனு மீதான விசாரணை, வரும் 14ம் தேதி நடைபெறும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Discussion about this post