சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் டிரோன்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியை துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆய்வு செய்தார். கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக கோயம்பேடு சந்தையில் கிருமிநாசினி தெளிக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. சென்னை மாநகராட்சி, சிஎம்டிஏ ஒருங்கிணைந்து அனைத்து வாயில்களில் வரும் வாகனங்களிலும், மார்க்கெட் வளாகத்திலும் கிருமிநாசினி தெளித்து வருகின்றனர். மேலும் வியாபாரிகள் இடைவெளியில் நின்று பொருட்களை வாங்கும் விதமாக ஒவ்வொரு கடையின் வாயிலிலும் கட்டங்கள் வரையப்பட்டுள்ளன. இந்நிலையில் டிரோன்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். மார்க்கெட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
Discussion about this post