காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜோதிராதித்ய சிந்தியா நீக்கப்பட்ட நிலையில், அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 20 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனால் மத்திய பிரதேச காங்கிரஸ் ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து ஜோதிர் ஆதித்ய சிந்தியா, காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில்,18 ஆண்டுகளாக கட்சியில் இருந்த நான் விலக வேண்டிய தருணம் வந்து விட்டதாக கூறியுள்ளார். மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்தை காங்கிரசில் இருந்து செய்ய முடிய வில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே ஜோதிர் ஆதித்ய சிந்தியாவின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்ட காங்கிரஸ் கட்சி, கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதற்காக அவரை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளது. இதனிடையே காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்களுடன் இணைந்து பாஜக ஆட்சி அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜோதிராதித்ய சிந்தியா நீக்கப்பட்ட நிலையில், அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 20 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனால் மத்திய பிரதேச காங்கிரஸ் ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆட்சியமைக்க 105 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில், பாஜக 107 எம்எல்ஏக்கள் பலத்துடன் உள்ளது. ஆனால் ஆளும் காங்கிரஸ் 101 ஆக குறைந்துள்ளது. இதனிடையே இன்று மாலை ஜோதிர் ஆதித்ய சிந்தியா பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Discussion about this post