மார்ச் 1ம் தேதி முதல் விழுப்புரம்-மயிலாடுதுறை இடையே மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் இரயில்வே இருப்புப்பாதைகளை மின்மயமாக்கும் திட்டத்தின் கீழ் விழுப்புரம் முதல் திருவாரூர் வரையிலான அகல ரயில் பாதையை மின்மயமாக்கும் பணி நடைபெற்று வருகின்றது.
பணிகள் நிறைவடைந்து மின் இன்ஜின் பொருத்தப்பட்டு கடந்த 7-ம் தேதி ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்நிலையில் மின்சார இன்ஜின்கள் மூலம் ரயில்களை இயக்குவது குறித்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் மயிலாடுதுறை-விழுப்புரம் இடையே மார்ச் 1-ம் தேதி முதல் முதல்கட்டமாக 6 பயணிகள் ரயில் மின்சார இன்ஜின் மூலம் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் விழுப்புரத்தில் ரயில்கள் புறப்படும் நேரங்களையும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Discussion about this post