குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பிரதமர் மோடியுடன் எதுவும் பேசவில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், இந்தியாவில் மத சுதந்திரம் சிறப்பாக இருப்பதாக பிரதமர் மோடி தன்னிடம் தெரிவித்தாக கூறினார். குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பிரதமர் மோடியுடன் எதுவும் பேசவில்லை என டிரம்ப் தெரிவித்தார். டெல்லியில் நடக்கும் கலவரங்கள் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என தெரிவித்த அவர், மத சுதந்திரத்திற்காக இந்தியா கடுமையாக பாடுபட்டு வருவதாக தெரிவித்தார். பாகிஸ்தான் விவகாரம் குறித்து பிரதமர் மோடியுடன் விரிவாக பேசியதாக கூறினார். தலிபான்களுடன் சமாதான ஒப்பந்தம் மேற்கொள்வது குறித்து பிரதமர் உடனான சந்திப்பில் விவாதிக்கப்பட்டது எனவும் தெரிவித்தார். இந்தியா வலிமையான நாடு பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் வலிமை இந்தியாவிடம் உள்ளதாக கூறிய அவர், ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய தயாராக உள்ளதாக குறிப்பிட்டார்.
Discussion about this post