ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தைச் சேர்ந்த கார்த்தி, மாதம்மாள் தம்பதி, தங்களின் எட்டு வயது குழந்தையுடன், உறவினர் வீட்டு துக்க நிகழ்வில்கலந்து கொள்வதற்காக பர்கூர் மலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.
அவர்கள் மலைப்பாதையின் முதலாவது வளைவில் சென்றுகொண்டிருந்த போது, எதிரே வந்த டிப்பர் லாரி மோதி விபத்துக்குள்ளானதில், கார்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவரது மனைவி மாதம்மாளுக்கு கால் முறிவு ஏற்பட்டது. இந்த விபத்தில் அவர்களது எட்டு வயது குழந்தை சந்தோஷ் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.
தகவலறிந்து வந்த காவல்துறையினர், விபத்தில் படுகாயமடைந்த மாதம்மாவை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு, கார்த்திக்கின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்துகுறித்து அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Discussion about this post