சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள பிரபல நகைக் கடையில் வருமான வரித்துறையினர் 19 மணி நேரமாக நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அம்மன் சன்னதியில் உள்ள MSP சேதுராமன் & சன்ஸ் நகைக்கடையில் நேற்று மாலை 4 மணி அளவில் வருமானவரி இணை இயக்குனர் பத்மாவதி தலமையிலான 13 பேர் கொண்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
தொடர்ந்து சோதனையானது அவர்களது 2 வீட்டிலும் நடைபெற்றது. இன்று காலை 11.30 மணி அளவில் சோதனை முடிவு பெற்ற நிலையில் 4 பைகள் நிறைய முக்கிய ஆவணங்கள் சிக்கியது . 9 மணி நேரமாக வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கை பற்றிய ஆவணங்களை வருமான வரித்துறையினர் எடுத்து சென்றனர்.
Discussion about this post