இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற கோத்தபய ராஜபக்சே அநுராதபுரத்தில் நடைபெற்ற விழாவில், 8-வது புதிய அதிபராகப் பதவியேற்றுக் கொண்டார். இதனையடுத்து, ஆளுங்கட்சி வேட்பாளர்கள், தேர்தலில் தோல்வியடைந்ததை அடுத்து ரணில் விக்கிரமசிங்கே பிரதமர் பதவியில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரணில் விக்கிரமசிங்கே பதவி விலகினால் அமைச்சரவையும் தானாகக் கலைந்துவிடும் என்பதால் புதிய அமைச்சரவையை கோத்தபய ராஜபக்சே நியமிப்பார் எனக் கூறப்படுகிறது. புதிய பிரதமராகத் தினேஷ் குணவர்த்தனேயை நியமிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
இலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்சே பதவியேற்ற பிறகு, முதல் உத்தரவாக, அரசு அலுவலகங்களில் உள்ள முன்னாள் அதிபர் மற்றும் பிரதமர் படங்களை நீக்க உத்தரவிட்டுள்ள அவர், அவற்றுக்கு பதிலாக இலங்கை அரசின் சின்னங்களை அமைக்க உத்தரவிட்டார்.
Discussion about this post