கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு ஆயிரத்து 120 கனஅடியாக அதிகரித்துள்ளது.
கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு கடந்த ஒருவாரமாக நீர்வரத்து அதிகரித்து வந்துக்கொண்டிருக்கிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில், பெய்து வரும் மழையின் காரணமாக இன்று ஏழாவது நாளாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது. விநாடிக்கு ஆயிரத்து 120 கனஅடி நீர் வந்துக் கொண்டிருக்கின்றது. அணையின் முழுக்கொள்ளவான 44 புள்ளி 28 அடியில், 41 புள்ளி 82 அடி உயரத்திற்கு நீர் சேமிக்கப்பட்டு, அணைக்கு வரும் ஆயிரத்து 120 கனஅடிநீரும் அப்படியே தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
Discussion about this post