திமுக வேட்பாளர் கனிமொழியின் வெற்றியை எதிர்த்து பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க கனிமொழிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மக்களவை தேர்தலில் கனிமொழி வெற்றியை எதிர்த்து தமிழிசை சவுந்தரராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார். கனிமொழி தாக்கல் செய்த வேட்புமனுவில் ஏராளமான குறைபாடுகள் உள்ளதாகவும், முறையற்ற வகையில் இந்த வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், பரிசீலனையின் போது தேர்தல் அதிகாரி நிராகரித்துவிட்டதாகவும் தமிழிசை தனது மனுவில் குற்றம் சாட்டி உள்ளார்.
கனிமொழியின் கணவர் மற்றும் மகன் குறித்த வருமான விவரங்கள்,பிரசாரத்தின் போது ஆரத்தி எடுத்த பெண்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் வழங்கியதாகவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், மனுவுக்கு பதிலளிக்கும்படி கனிமொழி மற்றும் தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Discussion about this post